1. Home
  2. தமிழ்நாடு

உயர்கல்வி பயில விரும்பும் 3 ஆம் பாலினத்தவர்களுக்கான முழு செலவையும் அரசு ஏற்கும்..!

1

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்.19) காலை 10.00 மணிக்கு தாக்கல் செய்து உரையாற்றினார்.

கலைஞரின் கனவு இல்லம் என்ற பெயரில் 2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அறிவித்தார். இந்த திட்டம் 3500 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு வீடும் 3.5 லட்சம் மதிப்பில் கட்டித் தரப்படும். 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டி குடிசைகளே இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவத்துள்ளார்.

புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும்

மெரினா, கடலூர் சில்வர் பீச் உள்ளிட்ட 8 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

தமிழகத்தில் கடற்கரைகளை மேம்படுத்த நீலக்கொடி கடற்கரைச் சான்றிதழ் திட்டம் அறிமுகம்.

தூண்டில் வளைவுகள், மீன் இறங்குதளங்களை அமைக்க ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு.

அயோத்திதாசர் பண்டடிதர் குடியிருப்புகள் திட்டத்துக்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு.

1000 ஆண்டுகள் பழமையான கோயில்களின் திருப்பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடி செலவில் மாநிலத் தரவு மையம் மேம்படுத்தப்படும்.

சென்னை, கோவை, மதுரை சேலம், திருச்சியில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி அமைக்கப்படும்.

தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் ஏற்படுத்தப்படும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தூக்குக்குடியில் வான்வாழி சார்ந்த நிறுவனங்களை ஊக்குவிக்க 2000 ஏக்கர் விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

மீண்டும் வேலைக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

பெண்கள், மாற்றுத்திறனாளி, 3 ஆம் பாலினத்தினர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் புதிய தொழிற் நிறுவனங்களுக்கு அவர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் ஊதிய மானியம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

காலை உணவுத் திட்டத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, மதுரையில் ரூ.26 கோடியில் 3 புதிய தோழி விடுதிகள் கட்டப்படும்.

உயர்கல்வி பயில விரும்பும் 3 ஆம் பாலினத்தவர்களுக்கான முழு செலவையும் அரசு ஏற்கும்

திண்டுக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.565 கோடி நிதி ஒதுக்கி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

பள்ளி கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ரூ. ரூ.13,720 கோடி ஒதுக்கீடு

வரும் நிதியாண்டில் புதிதாக 10,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் 435 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்

தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு

கோவையில் மாபெரும் நூலகம் கலைஞர் பெயரில் உருவாக்கப்படும் 

அரசு பள்ளி மாணவர்கள் பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை வெளிநாட்டு சென்று மேற்கொள்ள உதவுத்தொகை வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் 

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை 29 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டு 1.19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ரூ.111 கோடி செலவில் 10 புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்

20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடியில் கோவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்

மருத்து காப்பீடு திட்டத்தை மேம்படுத்த காப்பீடு தொகுப்பு நிதியில் இருந்து ரூ.200 கோடி செலவிடப்படும். விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்திற்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்கான உச்சவரப்பு தொகை ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது 

புதிய புற்றுநோய் மேலாண்மை பிரிவு செயல்படுத்தப்படும். புற்றுநோய் மருத்துவமனைகளை மேம்படுத்தப்படும் 

சேலம் மாவட்டத்தில் கொண்டுவரப்படும் சிப்காட் நிறுவனத்தில் மூலம் 8000 பேருக்கு வேலைவாய்ப்பு மற்றும் ரூ.800 கோடி முதலீடு ஈர்க்கப்படும்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.120 மதிப்பீட்டில் 300 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்

Trending News

Latest News

You May Like