வயதான தம்பதியை செருப்பால் அடித்த அரசு ஊழியர்... வழக்குப்பதிவு செய்த போலீசார் !

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சேர்ந்தவர் சுப்புராயன்(65), இவரது மனைவி லட்சுமி( 59). ஜெயாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி சுப்புராயான் காவலராக பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு அருகே, ராமலிங்கநகரை சேர்ந்த சரவணன்(55) என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் மாடுகள் அடிக்கடி, அடுக்குமாடி குடியிருப்பிற்குள் நுழைவது வழக்கமாக இருந்துள்ளது.
இதனால் கணவன், மனைவி இருவரும் மாடுகளை குடியிருப்புக்குள் நுழையாமல் தடுக்க புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறையில் பணியாற்றி வரும் சரவணனிடம் கூறியுள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த சரவணன், நடு வீதியில் வயதான தம்பதியரை செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார்.
சரவணன் அவர்களை செருப்பால் தாக்கும் காட்சி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இது புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சுப்புராயன்அளித்த புகாரின் பேரில் தன்வந்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வருகின்றனர்.
newstm.in