வெளியானது 'The GOAT' டிரெய்லர்..!
நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ரிலீசாக இன்னும் ஒரு மாத காலம்கூட இல்லாத நிலையில் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸுக்காக வெயிட்டிங்கில் உள்ளனர். இந்த படத்துடன் தளபதி 69 படத்தையும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக முன்னதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார். தீவிர அரசியலில் அவர் ஈடுபட உள்ளதாகவும் வரும் 2026ம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி பங்கேற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தளபதி 69 படம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், கோட் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. கோட் படத்தை பார்த்த நடிகர் விஜய், வெங்கட் பிரபுவை மிகப்பெரிய அளவில் பாராட்டி பேசியதாக சமீபத்தில் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற செய்துள்ளன. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெயிலர் விரைவில் ரிலீசாக உள்ளதாக தொடர்ந்து சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனிடையே தற்போது படத்தின்படத்தின் டிரெய்லர் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் விஜய் இரட்டை வேடங்களில் ஸ்டைலிஷ்ஷாக அசத்துகிறார். இன்று மாலை காட்சி முதல் இடைவேளையின்போது இந்த டிரெய்லர் ஒளிபரப்பாகும் என திரையரங்குகள் தெரிவித்து வருகின்றன.