1. Home
  2. தமிழ்நாடு

கதறி அழுத சிறுமியின் தாய்... சிசிடிவி வீடியோ காட்டுங்க..!

Q

விக்கிரவாண்டி (Vikravandi) பகுதியில் வசித்து வருபவர் பழனிவேல். இவரின் மனைவி சிவசங்கரி. தம்பதிகளுக்கு 4 வயதுடைய சிறுமி லியா லட்சுமி என்ற மகள் இருக்கிறார். இவர் விக்கிரவாண்டியில் (Vikravandi Child Death) உள்ள செயின்ட் மேரி தனியார் பள்ளியில் பயின்று யுகேஜி பயின்று வந்தார். இதனிடையே, நேற்று மாலை சிறுமி பள்ளி வளாகத்தில் இருந்த கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சிறுமி சிறுநீர் கழிக்க தனியாக சென்றதால், அவர் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்ததாகவும் தெரியவருகிறது. அவரை நீண்ட நேரம் கழித்தே பள்ளி நிர்வாகம் தேடியதாக உறவினர்கள் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

குழந்தையின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததால் காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட காரணத்தால், உறவினர்களின் கோரிக்கையை ஏற்று கேமிரா முன்பு பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, குழந்தையின் உடல் அவரின் சொந்த ஊருக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. சிறுமியின் உடலை கண்ட பெற்றோர், உறவினர் கதறியது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் மாணவியின் தாய் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பள்ளி நிர்வாகத்தின் மீது சந்தேகம் எழுப்பியுள்ள பெற்றோர், சிசிடிவி வீடியோவை காண்பிக்க வேண்டும் என்றும் தங்கள் மகள் இறந்ததை பார்க்க வேண்டும் என்றும் அழுதனர். கழிவு நீர் தொட்டியில் விழுந்ததாக கூறினார்களே அப்படியென்றால் சிசிடிவி காட்சியை காட்ட வேண்டும் எனறு தாய் கதறினார்.

Trending News

Latest News

You May Like