நண்பனை நம்பிச்சென்ற பெண்.. 5 பேரால் சீரழிக்கப்பட்ட கொடூரம் !
டெல்லியைச் சேர்ந்த 27 வயதான இளம்பெண் ஒருவர் சுற்றுலா வழிகாட்டியாகவும், டிக்கெட் புக்கிங்க் ஏஜெண்டாகவும் செயல்பட்டு வருகிறார்.
அந்த பெண் தனக்கு ஏற்கனவே அறிமுகமான மனோஜ் சர்மா என்பவரிடம் 18 லட்சம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். அதில் முதல் தவணையாக 7 லட்சம் வாங்கிய அப்பெண், கடனின் 2ஆவது தவணை பணத்தை வாங்க மனோஜ் சர்மாவை தேடிச் சென்றார்.
ஆனால் அவரோ அலுவலகத்திற்கு வரவேண்டாம், தான் தங்கியிருக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு வருமாறு கூறியுள்ளார். அதன்படி ஓட்டலின் அருகே சென்ற அந்த பெண் வெளியே வருமாறு மனோஜ் சர்மாவிடம் கூறியுள்ளார்.
ஆனால், தனது அறைக்கு வந்து பணத்தை பெற்றுச்செல்லுமாறு மனோஜ் சர்மா கூறியுள்ளார். தனக்கு பணத் தேவை இருப்பதாலும், நண்பன் தானே எனவும் எண்ணி அவர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு சென்ற அந்த பெண்ணிற்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு ஏற்கெனவே மனோஜ் சர்மாவின் மேலும் நான்கு நண்பர்கள் இருந்தனர். அப்பெண் உள்ளே சென்றதும் அறையின் கதவை பூட்டிக்கொண்டு மனோஜ் சர்மா இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் மேலும் 4 பேர் மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மனோஜ் சர்மா அந்த இளம்பெண்ணை தனது காரிலேயே வீட்டில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். அதிர்ச்சியில் இருந்து மீண்ட பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நடந்த கொடூரம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முக்கிய குற்றவாளியான மனோஜ் சர்மாவை கைது செய்தனர். மேலும், 4 பேரை தேடி வருகின்றனர்.
newstm.in