பெற்றோருடன் உறங்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை.. இளைஞரை சுட்டுப்பிடித்த போலீசார் !

உத்தரபிரதேசம் மட்டுமல்லாமல் சமீப காலமாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இக்குற்றங்களில் ஈடுபடுவோர்களை கடுமையாக கண்டித்தால் இதுபோன்ற சம்பவங்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள், மக்கள் கூறுகின்றனர்.
ஆனால் சாதி, அதிகாரம், பணம், அரசியல் போன்ற காரணங்களால் குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர். இதனால் தான் குற்றங்கள் அதிகரிப்பதாக புகார் கூறப்படுகிறது.
தற்போது கர்நாடகாவில் 4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் அப்படி தான் நடந்துள்ளது. ஸ்ரீராமபுராவில் தமிழகத்தைச் சேர்ந்த நபர் மனைவி மற்றும் 4 வயது மகளுடன் தகரக் கொட்டகை அமைத்து அதில் வசித்து வருகிறார்.
அவர்கள் குடும்பமாக அங்கு பொம்மை வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி அங்கு பெய்த மழையால் அவர்களின் கொட்டகைக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் பலத்த காற்று காரணமாக கொட்டகை சேதமடைந்ததால் சங்கோலி ராயண்ணா ரயில்நிலையம் பிளாட்பாரத்தில் தங்கினர்.
இரவில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தப்போது அங்கு நைசிகா வந்த ஒருவர் சிறுமியை கடத்திச்சென்று மறைவான இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் சிறுமியை மீட்ட பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் நடந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவன் தான் இக்கொடூரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவனது குடியிருப்பு பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது தினேஷ் இருப்பிடத்தை அறிந்த போலீசார் அங்கு சென்று பிடிக்க முயன்றப்போது உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி செய்துள்ளான். இதனையடுத்து சிறிது தூரம் துரத்திய போலீசார் பின்னர் அவன் காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தர்.
மேலும், அவனை கைது செய்து விசாரணை நடத்தியதில் இக்கொடூரமான செயலில் ஈடுபட்ட தினேஷ்-ம் சென்னையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரை சிறையில் அடைத்து விசாரணை நடத்துகின்றனர்.
newstm.in