1. Home
  2. தமிழ்நாடு

விஜய் தலைமையில் நடக்கும் தவெக பொதுக்குழு.. தேதி அறிவித்த புஸ்ஸி ஆனந்த்..!

1

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். முதற்கட்டமாக பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். அடுத்ததாக மாவட்ட வாரியாக மாவட்ட செயலாளர்கள் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு ஆட்களை நியமனம் செய்துள்ளார்.


மேலும் அவ்வப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பனையூர் கட்சி அலுவலகத்தில் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி மாநிலம் முழுவதும் தவெகவில் இளைஞர்களை சேர்க்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது. விஜயை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் விஜய் தனது தலைமையில் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளார். மேலும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற வசதியாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிசோரை தன்னுடன் வைத்துள்ளார். மேலும் விஜய் தற்போது தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு அவர் தீவிரமாக அரசியலில் ஈடுபட உள்ளார். இதற்கிடையே தான் தவெகவின் பொதுக்குழு கூட்டம் என்பது விஜய் தலைமையில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டமானது மார்ச் மாதம் 28 ஆம் தேதி (28.03.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் கழக விதிகளின்படி கழக தலைவர் (விஜய்) தலைமையில் நடைபெற உள்ளது. கழகப் பொதுக்குழ உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்கான அழைப்பு கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டிருக்கிறது.


பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மற்றும் தலைமை கழகத்தின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து இப்பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like