மகிழ்ச்சியில் சென்றவரை பெண்ணுடன் நிர்வாணமாக்கி படம்பிடித்து மிரட்டிய கும்பல் !

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் நாட்ராயன் (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக விசைத்தறி கூடம் வைத்து அதில் போர்வை உற்பத்தி செய்து வருகிறார்.
இந்நிலையில் இவரது செல்போனுக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பெண் ஒருவர் இனிமையான குரவில் பேசியுள்ளார். தனது பெயர் வெண்ணிலா என்றும், தங்களுக்கு போர்வை அதிகளவில் தேவைப்படுவதால் ஆர்டர் அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஆண்டிபாளையம் பகுதிக்கு வந்து ஆர்டர் தொடர்பான தகவல்களையும், முன்பணத்தையும் பெற்றுக்கொள்ளுமாறும் அப்பெண் கூறியுள்ளார். ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், பெரிய ஆர்டர் கிடைக்கிறது என எண்ணி நாட்ராயன் அங்கு செல்ல முடிவெடுத்தார்.
அதன்படி உறவினர் ஒருவரோடு அந்தப்பெண் குறிப்பிட்ட இடத்திற்கு நாட்ராயன் சென்றுள்ளார். அங்கு சென்றப்போது அந்த இடத்தில் வேறு யாரும் இல்லை என்பதால் இருவர் மட்டும் தனியாக நின்றுக்கொண்டிருந்தனர். அப்போது ஏற்கெனவே பதுங்கி இருந்த கும்பல் நாட்ராயன் மற்றும் அவரது உறவினரை மடக்கிப் பிடித்து அவர்களின் ஆடைகளை களைந்துள்ளனர்.
மேலும் அந்தக்கும்பலில் இருந்த பெண்ணோடு இருவரையும் நிற்கவைத்து தவறான கோணத்தில் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். இதனால் இருவரும் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்தனர்.
பின்னர் அந்த போட்டைவை காட்டி மிரட்டிய அக்கும்பல் ரூ. 3 லட்சம் பணம் தரவேண்டும் என மிரட்டியுள்ளனர். மேலும் நாட்ராயன் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகை, அவருடைய செல்போன், கையில் இருந்த ரூ.3ஆயிரம் பணத்தையும் பறித்துக்கொண்டு அனுப்பியுள்ளனர்.
மறுபடியும் நாட்ராயன் செல்போனுக்கு அழைத்த மோசடி கும்பல் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து நாட்ராயன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை அடுத்து செல்போன் எண்ணைக் கொண்டு விசாரணை நடத்திய போலீசார் அவிநாசியை சேர்ந்த கவிதா (எ) வெண்ணிலா (27), தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிபாண்டி (30), நெல்லையைச் சேர்ந்த இசக்கிமுத்து (27), ஜெபராஜ் (24), சின்னதுரை (29) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து நகை, பணம், கார், அரிவாள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இதே கும்பல் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
newstm.in