அண்ணன் மீதான பகையில் தங்கையை சீரழித்த கும்பல்.. பெரும் பதற்றம் !

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது இளம்பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இப்பெண்ணின் சகோதரருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதனால் இரு தரப்பினரும் அவ்வப்போது மோதிக்கொள்ளும் நிலை ஏற்படும். மேலும் பழிதீர்க்க இரு தரப்பினரும் திட்டம்போட்டு இருந்தனர்.
இந்த சூழலில், கடந்த 14ஆம் தேதியன்று 19 வயது பெண் அவது வீட்டின் அருகேயுள்ள மாட்டுக்கொட்டகையில் உள்ள மாடுகளுக்கு தீவனம் வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒளிந்து கொண்டிருந்த சந்தீப் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேர் விரட்டிபிடித்தனர்.
அப்பெண் தப்பமுயன்றும் முடியாததால் மாட்டுக்கொட்டகையியிலேயே மூவரும் மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் ஆட்கள் வருவதை உணர்ந்த அவர்கள் அப்பெண்ணை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடினர்.
அங்கு வந்த சிலர் பெண்ணின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
newstm.in