1. Home
  2. தமிழ்நாடு

பாஜக தலைவரையும் விட்டு வைக்காத வடமாநில மோசடி கும்பல்..!

1

புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன்.இவர் 2015 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி பாஜக தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரது செல்போன் எண்ணிற்கு, ஒரு மெசேஜ் வந்துள்ளது. தெரியாத நம்பர் என்பதால் இவரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.அதையடுத்து தொடர்ந்து அவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் வந்தது. 

இந்த நிலையில் கடந்த வாரம் அவரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வீடியோ கால் ஒன்று வந்தது. அதனை சாமிநாதன் எடுத்த போது மறுமுனையில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடை ந்த அவர் உடனடியாக செல்போன் அழைப்பை துண்டித்தார். 

அதையடுத்து அவரது செல்போன் எண்ணுக்கு மற்றொரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய ஒரு பெண் சாமிநாதனிடம் செல்போனில் ஆபாச வீடியோவில் பதிவான காட்சி இருப்பதாக கூறி ரூ.50 ஆயிரம் பணம் கேட்டார்.இல்லாவிடில் வீடியோ அழைப்புக் காட்சியை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டினார்.    

இதையடுத்து பாஜக தலைவர் சாமிநாதன் உடனடியாக குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார்.போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இது பற்றி போலீஸாரிடம் கேட்டதற்கு, “முதல் கட்ட விசாரணையில் ராஜஸ்தான் பகுதியிலிருந்து ஆண், பெண் ஆகியோர் கைபேசியில் பாஜக தலைவரை தொடர்பு கொண்டிருப்பது தெரியவந்தது. அவர்களை விரைவில் கைது செய்வோம்” என குறிப்பிட்டனர்.

இதுதொடர்பாக சைபர்கிரைம் போலீசார் கூறுகையில், பொதுமக்கள் தங்களின் செல்போன் எண்களுக்கு, புதிய எண்களில் இருந்து வரும் வீடியோ கால்களை ஏற்க வேண்டாம். தற்போது ஆன்லைன் மோசடி கும்பல், வீடியோ கால் மூலமாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஆபாச காட்சிகளை வைத்து எதிர் முனையில் இருப்பவர்கள் உரையாடுவது போல காட்சிகளை ஜோடிக்கிறார்கள். இதுபோல் யாரேனும் பாதிக்கப்பட்டால்  உடனடியாக சைபர் கிரைம் காவல்துறை எண் 1930-ல் புகார் அளியுங்கள் என தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like