1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் ஆட்டம் ஆரம்பம்..!வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு..!

Q

கடந்த மே 2ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 சரிந்து, ஒரு சவரன் ரூ.70,040க்கு விற்பனை செய்யப்பட்டது. மே 3ம் தேதி சனிக்கிழமை தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்று (மே 04) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.
இந்நிலையில், இன்று (மே 05) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரம் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வை சந்தித்து உள்ளது.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 100 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like