விளையாட்டு விபரீதமானது...கடற்கரை மணலில் சிக்கி 5 வயது சிறுமி உயிரிழப்பு ..!
அமெரிக்கா தெற்கு பகுதயில் உள்ள ஃபோர்ட் லாடர்டேல் நகரின் கடற்கரையில் நேற்று முன்தினம் (பிப். 20) சிறுமி ஒருவர் மற்றொரு சிறுவனுடன் இணைந்து ஆழமாக குழி தோண்டி விளையாடி கொண்டு இருந்துள்ளார். அப்போது குழி இடிந்து மண் சரிந்ததில் சிறுவனும், சிறுமியும் மணலில் புதைந்து விபத்தில் சிக்கியுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர மீட்பு குழுவினர், கடற்கரை மணலில் சிறுவன் மார்பு வரை புதைக்கப்பட்டு இருப்பதையும், சிறுமி அதற்கு அடியில் சிக்கி இருப்பதையும் பார்த்துள்ளனர்.
அதிகாரிகளின் தகவல்படி, சிறுவர்கள் இருவரும் இணைந்து லாடர்டேல் பகுதி கடற்கரையில் 1.8m (6ft) ஆழத்திற்கு குழி தோண்டி இருப்பதாக கணக்கிட்டனர். மீட்பு குழுவினர் குழிக்குள் மேலும் மண் சரிந்து விழாமல் இருப்பதை தடுப்பதற்காக ஆதரவு பலகைகளை பயன்படுத்தி மண்வெட்டிகளை கொண்டு மணலை அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து குழியில் இருந்த மீட்கப்பட்ட 7வயது சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.