இனிதான் விளையாட்டே ஆரம்பிக்க போகுது - குஷ்பு..!
தேசிய மகளிர் ஆணைய தலைவியாக குஷ்பு கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியைத் தழுவினார். அதன் பிறகுதான் அவருக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
இந்த பதவியிலிருந்து நேற்று ராஜினாமா செய்த குஷ்பு சென்னை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களில் குஷ்பு கலந்து கொண்டார்.
இதுகுறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் நான் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததற்கு காரணம் ஒன்றுதான். ஒரு பொறுப்பில் இருக்கும் போது கட்சி சார்பாக இயங்க முடியாது. உங்களுக்கே தெரியும், கமலாலயத்திற்கு (சென்னை பாஜக தலைமையகம்) ஒன்றரை ஆண்டுகள் கழித்துதான் நான் வந்திருக்கிறேன்.
பாஜகவுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் எனக்கு இருக்கிறது. எனக்கு பேச்சு திறமை இருக்கிறது. ஆனால் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி கொடுத்துவிட்டதால் என்னால் தேசிய அளவிலும் தமிழகத்திலும் நடக்கும் டிவி விவாதங்களில் கூட பங்கேற்க முடியவில்லை. இப்போது ஃப்ரீயாகிவிட்டேன். இனி முழு நேர அரசியலில் ஈடுபடுவேன்,
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்காக ஏதேனும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதா என கேட்கிறீர்கள்.அப்படியெல்லாம் ஒரு அழுத்தமும் காரணம் இல்லை.
நான் கடந்த மாதம் ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டேன். நேற்றைய தினம்தான் எனது ராஜினாமா ஏற்கப்பட்டது. என் பெயரை கேட்டாலே திமுகவுக்கு பயம்தான். கட்சி பணிகளில் இல்லாத போதே நான் நிறைய பேசியிருக்கேன். இப்போது கட்சி சார்பாக பேசினால் எப்படியெல்லாம் பேசுவேன் என அவர்களுக்கு தெரியும். அந்த பயம் இருக்கட்டும். மடியில் கனம் இருந்தால்தான் பயம் இருக்கும். அந்த பயத்தால்தான் திமுகவினர் பேசி வருகிறார்கள். பேசட்டும். இனிதான் விளையாட்டே ஆரம்பிக்க போகுது. இவ்வாறு குஷ்பு தெரிவித்தார்.