ஆட்டம் ஆரம்பம்..! வங்கக்கடலில் உருவானது பெங்கல் புயல்..!
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவிழந்து கரையை கடக்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது புயலாக வலுவடைந்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் பரிந்துரையின்படி இப்புயலுக்கு "ஃபெங்கல்" என பெயரிடப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே நாளை பிற்பகல் "ஃபெங்கல்" புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என்றும் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது