இணையத்தில் வைரலாகும் ‘கோட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!
'GOAT' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் குரலில் உருவாகி உள்ள நிலையில், கூடிய விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பல போஸ்டர்கள் வந்த நிலையில், இனிமேல் போஸ்டர் விட்டால் எல்லாம் ரசிகர்கள் அப்டேட்டாக ஏற்க மாட்டார்கள் என வெங்கட் பிரபுவே சொன்ன நிலையில், கூடிய விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி GOAT படத்தில் கிரிக்கெட் விளையாட்டுக்கு முக்கிய இடம் இருப்பதாக சொல்லப்படுகிறது. வெங்கட் பிரபு தீவிரமான கிரிக்கெட் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவேளை இந்தத் தகவலின்படி கிரிக்கெட் விளையாட்டு GOAT படத்தில் இடம்பெறும்பட்சத்தில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை. படத்தின் ஷூட்டிங்கில் ரஷ்யாவில் மட்டும் இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாக திரைத்துறையில் பேச்சு எழுந்தது.இந்நிலையில் 'The Greatest Of All Time' படத்தின் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டடி வந்தனர். இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி THE GOAT' படத்தின் முதல் பாடலுக்கு தயாரா? என்று பதிவிட்டு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த பாடலை நடிகர் விஜய், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல் இளைஞர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது.