1. Home
  2. தமிழ்நாடு

உலகநாயகனின் ‘இந்தியன் 2’ படத்தின் முதல் ப்ரொமோ வெளியீடு !

1

 கமல்ஹாசன் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான படம், ‘இந்தியன்’. இப்படத்தில் சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதன் அடுத்த பாகம் ‘இந்தியன் 2’ என்ற பெயரில் இப்போது உருவாகி இருக்கிறது. இதில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசை அமைத்துள்ள பான் இந்தியா முறையில் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. படம் வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிளான ‘பாரா’ பாடல் புதன்கிழமை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பாடலின் ப்ரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.


அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். அனிருத்துடன் இணைந்து ஷ்ருதிகா சமுத்ராலா பாடியுள்ளார். உற்சாகத்தைக் கூட்டும் இந்தப் பாடல் வீரத்தை பறைசாற்றும் வகையில் எழுதப்பட்டுள்ளதை புரொமோ உணர்த்துகிறது. பெரும்பாலும் தனது படங்களில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றிய ஷங்கர் முதன்முறையாக அனிருத்துடன் இணைத்திருப்பதால் பாடல் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending News

Latest News

You May Like