1. Home
  2. தமிழ்நாடு

பீகாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. பாதுகாப்புக்கு மத்திய அதிரடி படை குவிப்பு !

பீகாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. பாதுகாப்புக்கு மத்திய அதிரடி படை குவிப்பு !


நாடு முழுவதும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. எனினும் தனிமனித இடைவெளி, முகக்கவசம், கைக்கழுவுதல் போன்ற நடைமுறைகளை கடைபிடிக்க தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில் பீகார் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த சூழலில் அங்கு 71 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
பீகாரில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. பாதுகாப்புக்கு மத்திய அதிரடி படை குவிப்பு !
இந்த தேர்தலில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் அல்லது மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டு நடைமுறையும் உள்ளது. இதன்படி, 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாக்களிக்க இருக்கின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குபதிவு மையங்களில் பாதுகாப்பு வழக்கத்தைவிட அதிகமாக குவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய அரசு 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை குவித்து உள்ளது. மாவோயிஸ்டுகள் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்ட வாக்குப்பதிவில் அதிகாலை முதலே மக்கள் ஆர்வமுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மக்கள் வாக்களிக்க ஏதுவாக அனைத்து இடங்களிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

newstm.in

Trending News

Latest News

You May Like