1. Home
  2. தமிழ்நாடு

இன்னும் சில நாட்களில் இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்..! எப்போ தெரியுமா ?

1

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 14ம் தேதி கன்னி ராசியில் ஏற்படுகிறது. இந்திய நேரப்படி 14ம் தேதி காலை 9.27 மணிக்கு தொடங்கி, பிற்பகல் 3.57 வரை நடக்க உள்ளது. இந்த சந்திர கிரகணம் கன்னி ராசியில் சூரியனை நட்சத்திர நாயகனாகக் கொண்ட உத்திரம் நட்சத்திரத்தில் நடக்க உள்ளதால் எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என தெர்நிது கொள்வோம்.

இந்த சந்திர கிரகணம் மார்ச் 14ம் தேதி காலை 9.27 மணிக்கு தொடங்குகிறது. இந்த நேரத்தில் கன்னி ராசியில் உள்ள உத்திரம் நட்சத்திரம் நடக்கிறது. இதன் காரணமாக சில ராசிகளுக்குச் சாதகமற்ற சூழல் உருவாகும். அசுபமான பலன்கள் ஏற்படும். அதனால் கிரகணத்திற்கான சூத காலத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும்.


இந்த சந்திர கிரகணம் தொடங்குவதற்கு முன் 9 மணி நேரத்திற்கு முன் சூத காலம் தொடங்குகிறது. அதனால் இந்த சூத காலம் தொடங்கி கிரகணம் முடியும் வரை சுப காரியங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். கடினமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். கிரகண நேரத்தில் வீட்டில் பூஜை அறையை மூடி வைக்கவும். இறை நாமத்தை உச்சரிப்பதும், மந்திரத்தை ஜெபிப்பதும் நல்ல பலனைத் தரும்.

சந்திர கிரகணம்: ஹோலி அன்று கன்னி ராசியில் சந்திர கிரகணம் ஏற்படும், இந்த 4 ராசிக்காரர்களும் அசுப விளைவுகளை ஏற்படுத்தும்.

மேஷ ராசி

இந்த சந்திர கிரகணத்தால் மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு சற்று சவாலானதாக இருக்கும். உங்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். அதே சமயம் நிதி நிலையில் ஏற்ற, இறக்கங்கள் சந்திக்க வாய்ப்புள்ளது. எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தவும். முடிந்தால் ஒத்திப் போடுவது நல்லது. புதிய வேலையைத் தொடங்க வேண்டாம்.


கடக ராசி

கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தால் நேரம் சாதகமற்றதாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நிதி நிலை ரீதியாகவும், உடல் ஆரோக்கியம் தொடர்பாகவும் கவனம் தேவை. உறவுகளில் ஏற்றத் தாழ்வுகள் சந்திக்க வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனை விஷயத்தில் கவனம் தேவை.


கன்னி ராசி

கன்னி ராசிக்கு இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம், உங்கள் ராசியில் நடக்கிறது. இதனால் கன்னி ராசியினர் கூடுதல் கவனம் தேவை. சில பாதகமான சூழல் இருக்கும் எந்த வகையில் ஆபத்தான செயலில் ஈடுபட வேண்டாம். உங்கள் வேலைகளை முடிப்பதில் சரியான திட்டமிடல் அவசியம். இல்லையெனில் தேவையற்ற அலைச்சலும், நேர விரயமும் ஏற்படும். சூழ்நிலை சாதகமற்றதாக இருக்கும்.


துலாம் ராசி

துலா ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த சந்திர கிரகணத்தின் தாக்கத்தால் தேவையற்ற உணர்ச்சி வசப்படுதல், கோபம் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் சிரமங்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது. மன கலக்கம் ஏற்படும். உங்களுக்கு இனம் புரியாத பயம், பதட்டம் ஏற்படும். அதனால் இந்த நேரத்தில் உங்கள் செயலில் பொறுமை அவசியம்.

Trending News

Latest News

You May Like