1. Home
  2. தமிழ்நாடு

படமே 2 நாள் தாண்டல..அதுபோல விஜய் கட்சி 6 மாசத்திற்கு மேல தாங்காது..! திமுக அமைச்சர் தாக்கு!

1

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்துவதற்கு திமுக அரசு குடைச்சல் கொடுப்பதாக விமர்சிக்கப்படும் நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மாடம்பாக்கத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், “இன்று நடிகர்கள் எல்லாம் அரசியல் பக்கம் வந்துவிட்டனர். ஏற்கனவே அரசியலுக்கு வந்த நடிகர் நிலைமை எல்லாம் என்னவென்று நாம் பார்த்துவிட்டோம். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து இன்று என்ன ஆனா? அதேபோல் தற்போது ஒருவர் அரசியலுக்கு வந்துள்ளார்.

யார் அரசியலுக்கு வந்தாலும் திமுகவினர் பயப்படக்கூடாது. என்றும் நிலைத்திருக்கும் ஒரே கட்சி திமுகதான். விஜய் நடித்த படமே 2 நாட்களுக்கு மேல் தியேட்டரில் ஓடவில்லை. அதனால் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 6 மாதங்கள்தான் தாக்குப் பிடிக்கும். அதற்கு மேல் தாங்காது. சினிமாவுக்கு வருகிற கூட்டத்தை பார்த்து நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். 6 மாதத்திற்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் என்ற சினிமா பெட்டியை உள்ளே வைத்துவிடலாம்” எனப் பேசியுள்ளார் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்.

 

Trending News

Latest News

You May Like