1. Home
  2. தமிழ்நாடு

திரையுலகினர் அதிர்ச்சி..! ‘ஒரு கிடாயின் கருணை மனு’ இயக்குனர் காலமானார்..!

1

கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நீண்ட நாட்டுகளுக்குப் பின் கடந்த ஆண்டு ‘சத்திய சோதனை’ படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. 

இப்படி, தனது இரண்டு படங்கள் மூலம், தனித்துவமான இயக்குநராக இருந்த சுரேஷ் சங்கையா கல்லீரல் பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.இவரது மரணசெய்தி ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சுரேஷ் சங்கையா உடல் கோவில்பட்டி அருகில் இருக்கும் அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட இருக்கிறது. 

சுரேஷ் சங்கையாவுக்கு மனைவி மற்றும் ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like