1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சியில் படக்குழு..! ‘பிசாசு-2’ படத்திற்கு இடைக்கால தடை..!

1

இரண்டாம் குத்து படத்தில் விநியோக உரிமைக்கான பாக்கி தொகையை வழங்காததை எதிர்த்து ஃப்ளையிங் ஹார்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

பணத்தை செலுத்தாமல் பிசாசு 2 படத்தை தயாரித்துள்ள ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம், அந்தப் படத்தை வெளியிட தயாராக உள்ளதாகக் கூறி, படத்தை வெளியிட தடை விதிக்க கோரி பிளையிங் ஹார்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

அந்த மனுவில், மத்தியஸ்தர் பிறப்பித்த உத்தரவின் படி, வட்டியுடன் சேர்த்து, ஒரு கோடியே 84 லட்சத்து 43 ஆயிரத்து 794 ரூபாய் செலுத்தும் வரை பிசாசு 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், பிசாசு 2 திரைப்படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் மனுவுக்கு நவம்பர் 18ஆம் தேதிக்குள் பதிலளிக்கும் படி ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like