விபத்தில் சிக்கிய நபருக்கு ஓடி சென்று உதவி செய்த பெண் அமைச்சர் !

விபத்தில் சிக்கிய நபருக்கு ஓடி சென்று உதவி செய்த பெண் அமைச்சர் !

விபத்தில் சிக்கிய நபருக்கு ஓடி சென்று உதவி செய்த பெண் அமைச்சர் !
X

ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது விபத்தில் சிக்கிய நபரை அமைச்சர் சரோஜா மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி வேலு என்பவர் விபத்தில் சிக்கினார்.இதையடுத்து, அந்த வழியாக சென்னைக்குச் சென்ற அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளரும் தமிழக சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறை அமைச்சருமான டாக்டர் வெ.சரோஜா, இதைக் கண்டு கடும் அதிர்ச்சி அடைடைந்தார்.


இந்த நிலையில், விபத்தில் சிக்கிய அந்த விவசாயிக்கு முதலுதவி அளித்து உடனடியாக ஆம்புலன்ஸ் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அருகிலிருந்த உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தும், மேல் சிகிச்சை ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினார். மேலும், சாலையில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டும் என்று பொதுகம்களை அவர் கேட்டுக் கொண்டார்.

விபத்தில் சிக்கிய நபருக்கு அமைச்சர் சரோஜா ஓடிச் சென்று உதவி செய்ததை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

Next Story
Share it