1. Home
  2. தமிழ்நாடு

ரசிகர்கள் குஷி..! இன்னும் 3 நாட்களில் ஓடிடியில் வெளியாகிறது மார்க் அண்டனி..!

1

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.

மார்க் ஆண்டனி படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி இறைவன் மற்றும் சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்கள் வெளியான போதிலும் மார்க் ஆண்டனி படத்தின் வசூல் குறையவே இல்லை.

இந்நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் 13 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.


  

Trending News

Latest News

You May Like