சூர்யாவிடம் கதை சொல்லி 6 வருடங்கள் காத்திருந்த பிரபல இயக்குநர்!

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவுக்கு என்று எப்போதும் தனி இடம் உண்டு. சிவகுமாரின் மகன் என்றாலும் கூட தனது விடாமுயற்சியால் நடிப்பை மெருகேற்றி இந்த இடத்திற்கு வந்துள்ளார்.
ஆனால் சமீப காலமாக சூர்யாவின் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அதனால் அவர் சூரரைப்போற்று படத்தை மிகவும் நம்பியுள்ளார். சூர்யாவிடம் ஆறு வருடங்களுக்கு முன்பு கதை சொன்ன பிரபல இயக்குனர் ஒருவர், தற்போது அதே கதையில் வேறு ஒரு நடிகரை வைத்து இயக்கி வருகிறார். கார்த்தியை வைத்து மெட்ராஸ் படத்தை இயக்கிய பா.ரஞ்சித் தான் அவர்.
மெட்ராஸ் படத்தின் போது ரஞ்சித் சூர்யாவுக்கு ஒரு கதை சொல்லி இருக்கிறார். ஆனால் சூர்யா ஆறு வருடமாக பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது அந்த கதையில் ஆர்யாவை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார் ரஞ்சித். பா.ரஞ்சித்தின் அடுத்தப்படமான சல்பேட்டா பரம்பரை சூர்யாவுக்கு சொல்லிய கதை தானாம். ஆனால் அவர் ஒப்புக்கொள்ள காலம் தாழ்த்தியதால் ஆர்யாவை வைத்து எடுக்க முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in