1. Home
  2. தமிழ்நாடு

தளபதி விஜய் படத்தை டாட்டூ குத்தியிருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!

தளபதி விஜய் படத்தை டாட்டூ குத்தியிருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!


நடப்பு ஐபிஎல் தொடர்பில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் பிரபல வீரர் ஒருவர் தனது கையில் விஜய்யின் தலைவா பட ஸ்டில்லை டாட்டூவாக குத்தியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.

ஆனால் இவர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதற்கு அடையாளமாக வருணின் இடது கையில் விஜய் கையை தூக்கியபடி திரும்பி போஸ் கொடுத்த தலைவா படத்தின் டிரேட் மார்க் போட்டோவை வருண் டாட்டூ குத்தியுள்ளார்.

அவர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றில் அந்த டாட்டூ தெரிகிறது. அந்த போட்டோவை ரசிகர்கள் அடையாளம் கண்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.


newstm.in

Trending News

Latest News

You May Like