மாஸ்க் போடல… ஆனா அதிகாரிகளிடம் பிரபல நடிகை கடும் வாக்குவாதம்!

மாஸ்க் போடாமல் காரில் வந்த நடிகை அதிதி பாலனுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்ததை அடுத்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பொதுமுடக்க தளர்வுகளுக்குப் பிறகு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. சில கட்டுப்பாடுகள் தொடரும் நிலையில், அருவி திரைப்பட நடிகை அதிதிபாலன் கொடைக்கானல் சென்றுள்ளார்.
அவர் அங்கு காரில் வந்து கொண்டிருந்த போது அதிகாரிகள் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏரிப்பாலத்தில் வழக்கம்போல சுற்றுலா பயணிகளை சோதனை செய்த அதிகாரிகள், அவர் முகக்கவசம் அணியாமல் வந்ததை கண்டு அவருக்கு அபராதம் விதித்தனர்.
அப்போது அதிதி பாலன், அபராதம் விதிப்பதற்கான அரசாணையை கேட்டும், காருக்குள் இருக்கும்போது முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும் என்று விதி உள்ளதா எனவும் அதிகாரிகளிடம் விவாதம் செய்தார்.
பின்னர், அதற்கான அரசாணை எங்களிடம் இல்லை. அபராதத்தை கட்டவேண்டும் என உத்தரவிட்டு அதிதியிடம் அபராதம் வசூல் செய்துள்ளனர். மேலும், அவரைப் படம் எடுத்த பத்திரிகையாளர்களிடமும் அதிதி கோபத்துடன் பேசியுள்ளார்.
newstm.in