கால் பாதம் தரையில் படாதவாறு வினோதமாக கிரிவலம் சென்ற குடும்பம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் கோவிலில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவல பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுகின்றனர். 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலம் பாதையில் ஞானிகளும் சித்தர்களும் பக்தர்களோடு இணைந்து கிரிவலம் செல்வர் என்பது ஐதீகம். அதேபோல் திருவண்ணாமலையில் அடிக்கு 1008 லிங்கம் இருப்பதாக ஆன்மீக பக்தர்களின் நம்பக்கையாக உள்ளது.
இந்நிலையில் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அகஸ்தியர் ஆசிரமத்தில் பணிபுரியும் ஊழியர், அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம் செய்துவிட்டு தன் குடும்பத்துடன் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிரிவலம் செல்ல தொடங்கினார். முன்னோர்களும் ஆன்மீக குருமார்களும் கூறியது போன்று அடிக்கு 1008 லிங்கம் மற்றும் சித்தர்களும் ஞானிகளும் கிரிவலப் பாதையில் கிரிவலம் செல்வதால் அவர்கள் மீது பாதங்கள் சாலையில் படாமல் இருக்க சாலையில் காடா துணி மற்றும் வேஷ்டியை பயன்படுத்தி அதன் மீது நடந்து சென்று கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டனர்.