1. Home
  2. தமிழ்நாடு

பட்டாசு ஆலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன்..!

1

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி – சாத்தூர் இடையே அமைந்துள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலியானதாகவும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மன வேதனையளிக்கின்றன.

விபத்தில் பலியானோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் குணமடைந்து முழு ஆரோக்கியத்துடன் வீடு திரும்ப இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசு சார்பில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டு பாதுகாப்பு விதிகளை பரிசோதிக்காததன் விளைவாகத் தான், பட்டாசு ஆலைகளில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

எனவே, இனியும் இதுபோன்ற விபத்துகள் நிகழாமலிருக்க தக்க ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டுமெனவும், படுகாயமடைந்தவர்களின் முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தமிழக முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Trending News

Latest News

You May Like