போடுற வெடிய...விரைவில் அரசியல் கட்சியாக மாறுகிறது விஜய் மக்கள் இயக்கம்!
இந்த சூழலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனது விஜய் ரசிகர் நற்பணி மன்றங்களை, மக்கள் இயக்கமாக மாற்றினார். இதன் மூலம் பல்வேறு சேவைகளையும் அவர் செய்து வருகிறார். அதோடு, தமிழகம் முழுவதும் மாணவர் படிப்பியக்கம், நூலகம் என பல்வேறு பணிகளை தன் மக்கள் இயக்கத்தின் மூலம் செய்து வருகிறார்.சமீபத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நேரடியாக சென்று, நிவாரண உதவிகளையும் நடிகர் விஜய் வழங்கினார்.
இந்நிலையில், பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் அரசியல் கட்சி குறித்து பல்வேறு அறிவுரைகளை நிர்வாகிகளுக்கு விஜய் வழங்கியதாக கூறப்படுகிறது.சென்னையில் நேற்று விஜய் நடத்திய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் இது தொடர்பாக தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டனவாம். இதனடிப்படையில் தாம் தொடங்க இருக்கும் கட்சியின் தலைவராக தாமே இருப்பதாகவும் உடனடியாக டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படும் எனவும் நிர்வாகிகளிடம் தெரிவித்தாராம் விஜய்.
இதைத்தொடர்ந்து, வரும் பிப்ரவரி 4-ம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தை முறைப்படி கட்சியாக பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான நிர்வாகிகள் டெல்லி செல்ல உள்ளனர்.