ஐடியா கொடுக்கும் மின்சார வாரியம்... மின்கட்டணத்தை குறைக்க அசத்தல் ஐடியா..!

தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சாரத்தை சேமிக்கவும், குறைவாக மின்கட்டணம் செலுத்தவும் புது யோசனையை மக்களுக்கு தெரிவித்துள்ளது.
இதன் படி பெரும்பாலான வீடுகளில் ஏசியை பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் இந்த கோடை காலத்தில் மட்டும் மின் கட்டணம் எளிதாக 10ஆயிரம் ரூபாயை தாண்டிவிடும். எனவே மின் கட்டணத்தை பெரும் அளவில் குறைக்க ஏசியை 24 டிகிரி பயன்படுத்த வேண்டும் என மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
அடுத்ததாக டிவி, வாஷிங் மெஷின், விளக்குகள், கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடுகள் முடிந்ததும் அதனை அனைத்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் தேவையை குறைக்கவும், மின்கட்டணத்தை குறைக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பகல் வேளைகளில் மின்சார தேவையை குறைக்கும் வகையில் வீட்டில் உள்ள விளக்குகளை அனைத்துவிட்டு சூரிய ஒளியை அதிகளவு பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார பயன்பாடு குறைவதோடு பூமியை காப்பாற்றுங்கள் என தமிழ்நாடு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
Summer is here! ☀️
— TANGEDCO Official (@TANGEDCO_Offcl) March 3, 2025
Beat the summer heat! 🌡️
Stay cool & save energy! 💚
Try these easy energy-saving tricks to stay comfortable all summer.👇#TNPDCL | #TANGEDCO | #TNEB | #SummerTips | #SaveEnergy pic.twitter.com/QWZS0BCLOX
- ஏசியில் உள்ள ஃபேன்களை அவ்வப்போது பயன்படுத்தலாம். எப்போதும் குளிரூட்ட மட்டுமே ஏசிகளை பயன்படுத்தக் கூடாது. மேலும் எனர்ஜி சேவிங் மோடில் வைத்து மின்சாரத்தை சேமிக்கலாம்.
- மின்சாரத்தை சேமிக்கும் விளக்குகளை வாங்கி பயன்படுத்துவது அவசியம். எல்.இ.டி விளக்குகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
- மிகவும் பழைய மின் உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
- ரிமோட் கண்ட்ரோல் உடனான ஸ்மார்ட் உபகரணங்களை பயன்படுத்தலாம். இதன்மூலம் குறிப்பிட்ட நேரம் மட்டும் இயங்கும் வகையில் செட் செய்துவிடலாம். இதனால் தேவைப்படாத நேரங்களில் தாமாகவே நின்றுவிடும்.
- சோலார் தகடுகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் உபகரணங்களை பொருத்தி கொள்வது மிகவும் சிறந்தது. இது எல்லா காலங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.