அபராதம் விதித்த போலீஸ்காரர்களை வித்தியாசமாக பழிவாங்கிய மின் ஊழியர்!!
போக்குவரத்து போலிஸார் அபராதம் விதித்தால் மீன் ஊழியர் ஒருவர் காவல் நிலையத்தின் மின் இணைப்பைத் துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பரேலி பகுதியைச் சேர்ந்த பகவான் ஸ்வரூப் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது போலீஸார் அவரை வழிமறித்து ஆவணங்களைப் பரிசோதனை செய்தனர்.
அப்போது அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் அவருக்கு ஆபராம் விதித்தனர். அப்போது அவர், அருகேதான் வீடு இருக்கிறது, ஆவணங்களை எடுத்து வந்து காட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஆனால், போக்குவரத்து போலீஸார் அவரின் வேண்டுகோளை ஏற்க மறுத்தனர். இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறியதாகக் கூறி அவருக்கு ரூ. 500 அபராதம் விதித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்வரூப் போலிஸாரை பழிவாங்குவதற்காக காவல்நிலையத்திற்கான மின் இணைப்பைத் துண்டித்தார். இது குறித்து போலீஸார் கேட்டபோது, மின் விநியோக மீட்டர் இல்லை என்றும், சட்ட விரோதமாக மின் இணைப்பு உள்ளதால் இணைப்பைத் துண்டித்தாக கூறியுள்ளார்.
newstm.in