1. Home
  2. தமிழ்நாடு

வாக்கு எண்ணிக்கையை சில மணி நேரங்களில் முடிக்கும் தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்?

1

இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம் வருமாறு:

பாராளுமன்ற தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்து 10 நாட்களுக்கு பிறகும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்து 4 நாட்களுக்கு பிறகும் வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்தது ஏன்? 

வாக்கு எண்ணிக்கையை சில மணி நேரங்களில் முடிக்கும் தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்? இதுதொடர்பான விளக்கங்களை அளிப்பதற்கு தேர்தல் ஆணையம் தயங்குவது ஏன்?

திருத்தி அறிவிக்கப்பட்ட முதற்கட்ட வாக்குப்பதிவில் 5.5 சதவீதமும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் 5.74 சதவீதமும் உயர்ந்திருப்பதற்கான தகுந்த காரணங்களை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். 

வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்படும் முரண்களை களைவதற்கு ஏதுவாக ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட வேண்டும். மேலும், வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like