கார் ஓட்டும் போது டிரைவர் உறங்கியதால் , நிகழ்ந்த கோர சம்பவம் !! சம்பவ இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி !!

திண்டிவனம் அருகிலுள்ள பதிரி கிராமத்தில் , சாலையோர மரத்தின் மீது கார் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் ஒரு கார் ஓட்டுனர் இறந்தனர்.
6 உடல்களும் பிரேத பரிசோதனைக்காக இங்குள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி இந்த விபத்தில் இறந்துவிட்டார்.
மேலும் 4 மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகளும் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, கார் ஓட்டுனர் கார் ஓட்டிக் கொண்டே தூங்கி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார் மரத்தில் மோதியவுடன், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அந்த குடும்பம், காஞ்சிபுரத்திற்கு செல்லும் போது இச்சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Newstm.in