1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் வரும் 16-ம் தேதி தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்..!

1

தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  

பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கூடுவதை ஒட்டி, சிறப்பு கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த பல்வேறு விவகாரங்கள் குறித்து தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like