எந்த கொம்பனாலும் தி.மு.க. எஃகு கோட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள்
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க. எனும் கொள்கை உறுதிமிக்க எஃகுக் கோட்டையைத் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று சூளுரைக்கும் திருநாள், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் நடக்கும் முப்பெரும் விழா திருநாள் ஆகும்.
புள்ளிவிவரங்கள்
பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்திலான வளர்ச்சி, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் உயர்ந்த நிலை, மருத்துவத்துறையில் மக்களின் நலன் காக்கு சிறந்த கட்டமைப்பு, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலம், அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிற மாநிலம், பெண்களின் முன்னேற்றத்திற்கும் தற்சார்பு நிலைக்கும் வழிவகுக்கும் மாநிலம் என்று மத்திய அரசின் புள்ளிவிவரங்களே தமிழகத்தின் சாதனைகளை எடுத்துச் சொல்லும் அளவுக்குத் திராவிட மாடல் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
அண்மையில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்று தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை ஈர்த்த நிலையில், அங்கு வாழும் தமிழர்கள் நம் மாநிலத்தின் நிலைகண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தனர். உலகம் போற்றும் திராவிடத்தின் பெருமை தொடர்ந்திட, தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நீடித்து நிலைத்திட, ஏழாவது முறையாக தி.மு.க. ஆட்சி மலர்ந்திட கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வெற்றிப்பாதையாக அமையட்டும்.
கொள்கையில்லாக் கூட்டத்தைச் சேர்த்து, கூக்குரலிட்டு, கும்மாளம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இயக்கமல்ல தி.மு.க.. நாம் கூடும்போது கொள்கைப் பட்டாளமாகக் கூடுவோம். கூட்டம் முடிந்து இலட்சிய வீரர்களாகப் புறப்படுவோம். தி.மு.க.வின் வெற்றிச் சரித்திரம் தொடரட்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
.png)