1. Home
  2. தமிழ்நாடு

சம்பவம் செய்த திமுக...டாஸ்மாக் கடையில் அண்ணாமலை போஸ்டர்..

Q

கடந்த திங்கள் கிழமை சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அவர்களை கைது செய்த போலீசார் 6 மணியை தாண்டியும் அடைத்து வைத்திருந்தனர். இதனால் கடுப்பான அண்ணாமலை இனி தமிழக காவல்துறையினர் தூங்கவே முடியாத அளவுக்கு பாஜகவினரின் போராட்டம் இருக்கும் என்று தெரிவித்தார்.

 

தொடர்ந்து பாஜகவினர் டாஸ்மாக் கடைகளை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பா என்ற வாசகத்துடன் முதல்வர் ஸ்டாலினின் போஸ்டரையும் டாஸ்மாக் கடைகளில் ஒட்டவும் முயன்று வருகின்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். சென்னை மேடவாக்கத்தில் டாஸ்மாக் கடையில் ஸ்டாலின் போஸ்டரை ஒட்டச் சென்ற பாஜகவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் போஸ்டர் டாஸ்மாக் கடையில் ஒட்டப்பட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டர் கோவையில் உள்ள டாஸ்மாக்கில் ஒட்டப்பட்டுள்ளது. அண்ணாமலையை கண்டித்து திமுகவினர் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் சங்கிகள் கவனத்திற்கு.. இந்தக் கடையில் தமிழக அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்கப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பான வீடியோதான் தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பாஜகவினரும் நெட்டிசன்களும் ஸ்டாலின் போஸ்டரை ஒட்டச்சென்ற பாஜகவினரை கைது செய்த காவல்துறையினர் அண்ணாமலையின் போஸ்டரை ஒட்டிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Trending News

Latest News

You May Like