தி.மு.க.வினர் அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்துவிட்டனர் - செல்லூர் ராஜூ..!

பேரறிஞர் அண்ணாவின் 115 - வது பிறந்த நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட தெற்கு 5- ம் பகுதி அ.தி.மு.க.சார்பில் பகுதி செயலாளர் ஜோசப்தனிஸ்லாஸ் தலைமையில் தவுட்டு சந்தை பந்தடி 5- வது தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேசியதாவது-
அண்ணா, எம்.ஜி.ஆர். வேறு, வேறு தாய் பெற்றிருந்தாலும் ஒரே மனம்படைத்தோர், ஒரே குணம்படைத்தவர்கள். இருவரும் பிரிக்கமுடியாத சகோதரர்கள். அண்ணா மீது எம்.ஜி.ஆர் அதிக பாசம் கொண்டு இருந்தார். தி.மு.கவில் எம்.ஜி.ஆர்., நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோரை தான் முன்னிலைப் படுத்துவார். கட்சியில் 28-வது இடத்தில் இருந்தவர் டாக்டர் கலைஞர். அண்ணா இருக்கும் வரை கலைஞரை தட்டியே வைத்திருந்தார். ஆனால் தற்போது கலைஞர் குடும்பம் தி.மு.க.வை குடும்ப கட்சியாக வைத்துள்ளார். அண்ணா அவர்கள் கட்சியை கஷ்டப்பட்டு வளர்த்தார். ஆனால் இன்று 4 சினிமா நடித்துவிட்டு படம் ஓடுனதும், நான் தான் முதலமைச்சர் என்று சொல்கின்றனர். சிலர் உடனடியாக கட்சி ஆரம்பிக்கின்றனர். உடனடியாக மந்திரி ஆகவேண்டும். உடனே முதலமைச்சர் ஆகவேண்டும் என நினைக்கின்றனர். எல்லாம் பாஸ்ட் புட் ஏரியாவக மாற்றுக்கின்றனர். அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட அ.தி.மு.க.விற்கு தான் உரிமை உண்டு. தி.மு.க.வினர் அண்ணாவின் கொள்கைகளை குழி தோண்டி புதைத்துவிட்டனர்.
தற்போது சிலர் படித்தவனுக்கு பித்துப்பிடிச்சது போல் கேலிபேசுகின்றனர். அண்ணாவை பற்றி கேலிபேசுகின்றனர். இறந்த தலைவர் பற்றி இழிவாக பேசுபவன் இழிபிறவி தான். நாங்கள் கூட கலைஞரை தற்போது மரியாதையாக தான் பேசுகிறோம். ஆனால் மறைந்த தலைவரை மதிக்காமல் பேசினால் தமிழ்சமூகம் மிதித்து விடுவார்கள். ஆளும் கட்சி என்று மத்தாப்பில் பேசலாம். அண்ணாவை பற்றி பேசினால் நாக்கை துண்டாக்கும் கொள்கை மறவர்கள் இருக்கிறார்கள். அண்ணா பல்வேறு சாதனை செய்தவர். அண்ணாவை பற்றி எவன் தவறாக பேசினாலும் அவன் நாக்கு அழுகிவிடும். பல ஏழை எளிய மக்கள் முன்னேறியதற்கு காரணம் பெரியார், அண்ணா அவர்கள் தான் காரணம். இவ்வாறு அவர் பேசினார்.