1. Home
  2. தமிழ்நாடு

இதுவே என் கடைசி அறிக்கை : ஜெயம் ரவி மனைவி பரபரப்பு அறிக்கை..!

Q

இதுவே என் கடைசி அறிக்கை. கடைசியாக ஒரு முறை பேசகிக் கொள்கிறேன் என்று மூன்று பக்கங்களுக்கு இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஆர்த்தி.

 

அந்த அறிக்கையில், 

வேறு வழியில்லாமல் பேசுகிறேன். பணம், அதிகாரம், தலையீடு, அடக்குமுறையால் எங்களின் திருமண வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. எங்கள் திருமணத்தில் மூன்றாவது ஒரு நபர் இருக்கிறார். எங்களுக்கு இடையேயான பந்தத்தை நாங்கள் உடைக்கவில்லை மாறாக வெளியாள் உடைத்துவிட்டார். உங்கள் வாழ்க்கையின் வெளிச்சம் நம் வாழ்க்கையில் இருளை மட்டுமே கொண்டு வந்தது.இது தான் உண்மை. விவாகரத்து வழக்குப்பதிவு செய்யும் முன்பே அந்த நபர் எங்கள் வாழ்க்கையில் வந்துவிட்டார். இது கணிப்பு அல்ல. என்னிடம் ஆதாரம் இருக்கிறது.

 

கணவரை கைக்குள் வைத்திருக்கும் மனைவி நான் என்கிறார்கள். எங்கள் குடும்பத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் பழக்கவழக்கங்களில் இருந்து என் கணவரை காப்பாற்றி, அவர் மீது அன்பு செலுத்துவது நான் கன்ட்ரோல் செய்வதாக இருந்தால் இருந்துவிட்டு போகட்டும். கணவரின் நலன் மற்றும் உடல்நலனுக்காக எந்த ஒரு அன்பான மனைவியும் அதை தான் செய்திருப்பார். அப்படி செய்யாத பெண்களுக்கு சமூகம் சில பெயர்களை கொடுக்கிறது.

கடினமான ஆண்டுகளில் கூட என் மாமனார், மாமியார் உள்ளிட்ட குடும்பத்தாருடன் இருந்தோம். அதற்கு எங்களின் சமூக வலைதள கணக்குகளே ஆதாரம்.

வெறும் காலில் வீட்டை விட்டு வெளியே சென்றாரா?, உடைமைகள், கண்ணியம் பறிக்கப்பட்டதா? உண்மை தெரியணுமா? அவர் பிராண்டட் செருப்பு, நல்ல உடை, பர்ஸ், ரேஞ்ச் கார் மற்றும் விரும்பியதை எல்லாம் எடுத்துக் கொண்டு தான் சென்றார். ஒரு திட்டத்தோடு அமைதியாக வெளியே சென்றார்.

என் பிடியில் இருந்து தப்பியதாக இருந்தால் அவர் நேராக தன்னை பார்க்கவிடாமல் வைத்திருக்கும் பெற்றோரிடம் தானே சென்றிருக்க வேண்டும். அதற்கு பதில் மேலும் சேதம் ஏற்படுத்தக் கூடிய இடத்திற்கு சென்றுவிட்டார். நல்லது செய்கிறேன் என்கிற பெயரில் என்ஜாய் செய்வதை காப்பாற்றப்படுவதாக குழம்ப வேண்டாம்.

கொடுமைப்படுத்தப்பட்டாரா? அப்படி என்றால் ஏன் இத்தனை ஆண்டுகளாக காத்திருக்க வேண்டும்? திருமணநாளை ஏன் கொண்டாட வேண்டும், குடும்ப வெகேஷனுக்கு ஏன் செல்ல வேண்டும், வாழ முடியாத சூழலில் ஏன் தொடர்ந்து வாழ வேண்டும்?. எல்லாம் அனுபவித்துக் கொண்டு இருந்ததால் தங்கினார். கேள்வி கேட்டதும் பயத்தில் அல்ல மாறாக ரகசியம் இனியும் ரகசியமாக இருக்காது என்பதால் வெளியேறிவிட்டார்.

அவர் வீட்டோடு மாப்பிள்ளை என்பது ஆதாரமற்றது.எங்களுக்கு திருமணமான நாளில் இருந்து அவரின் பெற்றோரின் வீடு, எங்களின் ஆழ்வார்பேட்டை, ஈசிஆர் வீடுகளில் தான் வாழ்ந்தோம். கோவிட் நேரத்தில் நாங்கள் வாழ்ந்த கட்டிடத்தில் எவிக்ஷன் இருந்ததால் சில வாரங்கள் என் பெற்றோர் வீட்டில் தங்கினோமே தவிர வேறு எப்பொழுதும் தங்கியதே இல்லை. எங்கள் பிள்ளைகளை கருவிகளாக நான் பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.

பாடகியும், தெரபிஸ்டுமான கெனிஷா பிரான்சிஸ் தன் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டு வந்ததாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் ரவி மோகன். இந்நிலையில் அது வெளிச்சத்தால் தங்களின் திருமண வாழ்க்கை இருண்டுவிட்டதாக கூறியிருக்கிறார் ஆர்த்தி.

Q

Trending News

Latest News

You May Like