கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு

கோவையில் தங்களது இடத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சூலூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 | 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு

கோவையில் தங்களது இடத்தை அபகரிக்க முயல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட‌ ஆட்சியர் அலுவலகம் முன்பு, சூலூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர்  தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், அவிநாசி சாலை உள்ள தனியார் கல்லூரியில் லேப் அஸிஸ்டெண்டாக பணியாற்றி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறாமல் இருந்தது. இன்று முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பெறபட்டு வரும் நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்த செந்தில்குமார் அவரது மனைவி தேன்மொழி அவர்களது இரு மகன்கள் ஜெய் ஆதித்யா மற்றும் ஜீவன் ஆதித்யா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் தங்களுக்கு சூலூர் அரசு மருத்துவமனை அருகில் 30 செண்ட் பூர்வீக இடம் இருந்ததாகவும் அதில் பெரும்பாலான இடத்தை தங்களது பாகத்தை விற்று விட்டதாக தெரிவித்தனர்.

இதில் தங்களுக்கு மூன்றரை செண்ட் இடம் இருப்பதாகவும், அதனை தற்போது   அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் மருத்துவர் மற்றும் அவரது  கணவர் தூண்டுதலின் பேரில் சிலர் அபகரிக்க முயல்வதாகவும்,  இது குறித்து புகார் அளித்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக தெரிவித்தனர்.

இடத்தை அபகரிக்க முயல்பவர்கள் தங்களை ஆட்களை வைத்து மிரட்டுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால்  கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP