குடிநீர் தொட்டியில் மலம் கலக்கவில்லை - மாவட்ட ஆட்சியர்..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளையில் குடிநீரை மாணவர்கள் பயன்படுத்தியபோது துர்நாற்றம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆசிரியர் அளித்த தகவலின்பேரில் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டறியும் பணிகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளது. இதனிடையே வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு இதுவும் கொடூரமானது என எதிர்க்கட்சிகள் கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர். காவல்துறையின் அறிவுறுத்திலின் பேரில் தடயவியல் நிபுணர் குமரன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.
சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை, அழுகிய முட்டையை காகம் கொண்டு வந்து தண்ணீர் தொட்டியில் போட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.