அரசு விழாவுக்கு துணை முதல்வருக்கு அழைப்பு இல்லை.. அழைப்பிதழில் பெயர் நீக்கம் என சர்ச்சை !

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இடையே மறைமுக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் தான் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கமுடியவில்லை.
அதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் வீடு என மாறி மாறி சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். இரவு வரை இந்த ஆலோசனை நேற்று நீடித்தது.
இந்நிலையில் சென்னையில் அரசு விழாவிற்காக, அரசு சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் நாளை நடைபெற உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைப்பதற்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறவில்லை. தனியார் பங்களிப்புடன் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், தனியார் நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பங்கேற்பார் என அச்சிடப்பட்டிருந்தது. தற்போது அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் துணை முதல்வர் பெயர் இல்லை.
இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தகவல் பரவி வருகிறது.
newstm.in