1. Home
  2. தமிழ்நாடு

துணை முதல்வர் அவங்க அப்பாக்கிட்ட இதைப்பத்தி பேசணும்.. செல்லூர் ராஜூ கோரிக்கை..!

Q

செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது அரசு வேலை வாய்ப்பில் விளையாட்டு துறையில் இரண்டு சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொடுத்தார். எடப்பாடி பழனிச்சாமி அவருடைய ஆட்சியில் மூன்று சதவீதமாக உயர்த்தி வழங்கினார். தற்போது கபடி வீரர்களையும் இந்த இடஒதுக்கீட்டு பிரிவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதேபோல் உயிரை பணயம் வைத்து விளையாடும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கும் அரசு காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். இழப்பீடு தொகையையும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தால் பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்கிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு 50000 ரூபாய் ஊக்கத்தொகை கொடுக்கிறார்கள். ஆகையால் விளையாட்டு வீரர்களுக்கு தாராளமாக நிதி உதவி செய்யலாம்.

இதற்காக விளையாட்டு துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் உள்ள உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையாரிடம் பேசி அனுமதி பெற்று இந்த ஆண்டு விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி அடையும் வரை வகையில் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும். அப்படி அவர் அறிவிக்காவிட்டால் 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமையும் போது விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் அவர்கள் கேட்கும் தொகைகள் வழங்கப்படும்.

அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்பு தொகையோடு வழங்கியிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி 2500 ரூபாய் வழங்கியிருக்கிறார். ஆயிரம் ரூபாய் வழங்கினார். முழு கரும்பும் வழங்கி தொடங்கி வைத்தார். இதே முதல்வர் ஸ்டாலின் அப்போது பொங்கல் தொகுப்பில் 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போது ஐந்தாயிரம் ரூபாய் என்பது இப்போது முப்பதாயிரம் ரூபாய்க்கு சமமானது.

இப்போது மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று இந்த ஆட்சி நினைத்தால் முப்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். அப்போது ஐந்தாயிரம் கொடுக்க வேண்டும் என்று கூறியவர்கள் தற்போது ஆயிரம் ரூபாய் கூட கொடுக்கவில்லை. கடந்த முறை எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தியதால்தான் ஆயிரம் ரூபாயும் கரும்பும் கொடுக்கப்பட்டது.. இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்

Trending News

Latest News

You May Like