நாளை மறுநாள் தான் கடைசி : ரயில்வேயில் அசத்தலான வேலை..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ரயில் டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (Railtel Corporation of India Limited) செயல்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் பிராட்பேண்ட், டெலிகாம், நெட்வோர்க்கை உருவாக்கி ரயில்வே தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அமைப்பை நவீனமயமாக்கும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.அதன்படி வை-பை வசதி, வீடியோ சர்வைலன்ஸ் சிஸ்டம், இ-அலுவலகம், டேட்டா சென்டர் சர்வீஸ் உள்ளிட்ட சேவைகளை இந்த நிறுவனம் தான் வழங்கி வருகிறது.
காலியிடங்கள்: இந்த ரயில்டெல் நிறுவனத்தில் உதவி மேலாளர் (டெக்னீக்கல்) பணிக்கு 26 பேர், துணை மேலாளர் (டெக்னீக்கல்) பணிக்கு 27 பேர், துணை மேலாளர் (மார்க்கெட்டிங்) பணிக்கு 15 பேர், உதவி மேலாளர் (பைனான்ஸ்) பணிக்கு 6 பேர், உதவி மேலாளர் (எச்ஆர்) பணிக்கு 7 பேர் என மொத்தம் 81 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வயது வரம்பு: உதவி மேலாளர் (டெக்னீக்கல், மார்க்கெட்டிங், எச்ஆர்) பணிக்கு 21 வயது முதல் 28 வயதுக்குள்ளும், துணை மேலாளர் (டெக்னீக்கல், மார்க்கெட்டிங்) பணிக்கு 21 வயது முதல் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 வயது முதல் 15 வயது வரையும் தளர்வு அளிக்கப்படும்.
கல்வி தகுதி: உதவி மேலாளர் (டெக்னீக்கல்) பணிக்கு டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ட்ரூமென்டேசன், எம்எஸ்சி (எலக்ட்ரானிக்ஸ்) அதற்கு நிகரான படிப்பை படித்து டெலிகாம் பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் துணை மேலாளர் (டெக்னீக்கல்) பணிக்கு பிஇ, பிடெக், பிஎஸ்சி(என்ஜினீயரிங்) பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் டெலிகாம், டெலிகாம், கம்ப்யூட்டர் சயின்ஸ்ட், கம்யூட்டர் அன்ட் கம்யூனிகேசன், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ அல்லது எம்எஸ்சி எலக்ட்ரானிக்ஸ், எம்சிஏ படிப்பை முடித்து டெலிகாம் பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
துணை மேலாளர் (மார்க்கெட்டிங்) பணிக்கு எம்பிஏ (மார்க்கெட்டிங்) படிப்பை முடித்து ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். உதவி மேலாளர் (பைனான்ஸ்) பணிக்கு எம்பிஏ (பைனான்ஸ்) படிப்பை முடித்திருக்க வேண்டும். உதவி மேலாளர் (எச்ஆர்) பணிக்கு எம்பிஏ (எச்ஆர்) படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மாதசம்பளம்: உதவி மேலாளர் (டெக்னீக்கல், மார்க்கெட்டிங், எச்ஆர்) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். துணை மேலாளர் (டெக்னீக்கல், மார்க்கெட்டிங்) பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் மாதம் 11ம் தேதிக்குள் https://www.railtelindia.com/ எனும் இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி பிரிவினருக்கு ரூ.600 கட்டணமாக உள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஆன்லைன் தேர்வு, நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.