1. Home
  2. தமிழ்நாடு

நாளை மறுநாள் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

1

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு விஜய் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆகஸ்ட் மாதம் 3-வது வாரத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, மற்றொரு மாநில மாநாட்டை நடத்துவதற்கும் இந்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் த.வெ.க. 2-வது மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 25-ம் தேதி மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தின் பிறந்த நாளான்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. மாநாட்டு திடல் 506 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. பிரமாண்டமாக மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இதையொட்டி நேற்று முன்தினம் காலை 5 மணி அளவில் பூமி பூஜை நடந்தது. அப்போது, கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

இந்த நிலையில் விஜய் தலைமையில் நாளை மறுநாள் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இரண்டாவது மாநில மாநாடு, சட்டசபை தேர்தல் தொடர்பான வியூகங்கள் அமைப்பது மற்றும் கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் விஜய் ஆலோசனை மேற்கொள்கிறார். மேலும் மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள், மாநாட்டுக்கு வருபவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Trending News

Latest News

You May Like