+2 தேர்வில் சாதித்த குடுகுடுப்பைக் காரரின் மகள்! எவ்வளவு மதிப்பெண் தெரியுமா?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைப்பகுதிக்கு பின்புறம் அமைந்துள்ள தென்பரங்குன்றத்தில் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்கு நான்கு பெண் பிள்ளைகளுடன் பிறந்த மாணவி தேவயானி +2 தேர்வில் 600க்கும் 500 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். உணவுக்கே வழி இல்லாத நிலையில், தெருவிளக்கில் படித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.
இந்நிலையில் தேவயானியின் பெற்றோர் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ.டாக்டர்.சரவணனை தொடர்பு கொண்டு விசயத்தை கூறினர். உடனே அங்கு சென்ற எம்எல்ஏ டாக்டர் சரவணன் அந்த மாணவியை கவுரப்படுத்தியதோடு கல்லூரிப்படிக்கான அனைத்து செலவையும் தானே ஏற்றுக்கொள்ளுவதாகவும் அவருக்கு தேவையான சாதி சான்றிதழ் பெற்று தருவதாகவும் உறுதியளித்துள்ளார். அந்த பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்று தருவதற்கான முயற்சியிலும் அவர் ஈடுப்பட்டுள்ளார்.
newstm.in