தேதி குறிச்சாச்சு..! அடுத்த மாதம் சென்னை திரும்புகிறார் அண்ணாமலை..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி லண்டன் சென்றார்.
லண்டன் நகரில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்பில் சேர்ந்து படிக்க இந்தியாவில் இருந்து 12 இளம் அரசியல் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரகா தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றார். லண்டனில் படிப்பை மேற்கொண்டு வரும் அண்ணாமலை அங்கிருந்தப்படியே கட்சிப் பணிகளையும் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அரசியல் படிப்பை முடித்து விட்டு அடுத்த மாதம் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் 23 ஆம் தேதி அண்ணாமலை சென்னை வரவுள்ளார். அண்ணாமலை சென்னை திரும்ப உள்ள தகவலை கேட்டு பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.இதனிடையே அண்ணாமலை சென்னை திரும்பியதுமே தமிழக பாஜகவில் பல்வேறு மாற்றங்களை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.