1. Home
  2. தமிழ்நாடு

ஆபத்து விலகியது..! சென்னையில் இன்று மிக கனமழை இருக்காது..!

1

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (அக். 17) அதிகாலை சென்னை அருகே கரையை கடக்கும்.காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்கிறது

காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு ஆபத்து விலகியது.

இந்நிலையில் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: சென்னையில் நேற்று பெய்த மிக கனமழை இன்று இருக்காது. மேகக்கூட்டங்கள் வடக்கு நோக்கி நகர்ந்ததால், மழை குறைந்தது. இன்று மழை பெய்யும். ஆனால் அதீத கனமழை இருக்காது. சென்னையில் மழை விட்டு விட்டு தொடரும். மிக கனமழை இருக்காது. நாளை, நாளை மறுநாளும் மழை தொடரும். ஆனால் அதீத மழை இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like