சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சிறையில் விபரீத முடிவு.. அதிகாரிகள் அதிர்ச்சி !
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி சிறையில் விபரீத முடிவு.. அதிகாரிகள் அதிர்ச்சி !

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் அரிசி வியாபாரி சுடலை மாரியப்பன். இவர் அதேகிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.
விசாரணை நடத்திய போலீசார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை உறுப்படுத்தினர். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி கைது செய்யப்பட்ட சுடலை மாரியப்பன், பெரியகுளம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு அவர் மீது, குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, சுடலை மாரியப்பன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சுடலை மாரியப்பன் லுங்கியைக் கிழித்து, ஜன்னல் கம்பியில் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. அவரை மீட்ட போலீசார் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுடலை மாரியப்பன் உயிரிழந்தார்.
கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து, கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
newstm.in