மக்கள் குடிக்கும் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த கொடூரம்!
கிராம மக்கள் குடிக்கும் குடிநீரில் சிலர் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்னால்லகரம் கிராமத்தில் ஊராட்சி சார்பில், காலையும், மாலையும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் கிராக மக்கள் குடிநீர் பிடிக்க சென்ற போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது குடிநீர் வழக்கத்திற்கு மாறாக வெள்ளை நிறத்தில் வருவது தெரிந்தது.இதனை அடுத்து அப்பகுதிவாசி ஒருவர், யாரும் குடிநீரை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகம் சோதனை செய்ததில் குடிநீரில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் முற்றிலுமாக நீக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசாரிடமும் புகார் அளிக்கப்பட்டது. நீரில் ஏன் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டது, ஏதும் தனிநபர் விரோதமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பூச்சிக்கொல்லி கலக்கப்பட்ட குடிநீர் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
newstm.in