அழுத குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்த கொடூர தாய்!
பசியால் அழுத குழந்தைக்கு தாய் பாலில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பாப்பான்குளத்தை சேர்ந்த சாதிக்பாஷா, யாஸ்மின் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் ஐந்து மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. தனியார் பேருந்து ஓட்டுநரான சாதிக்பாஷாவுக்கு கொரோனா பொதுமுடக்கத்தால் வேலை இல்லை. இதனால் கடும் வறுமையில் இருந்துள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான யாஸ்மின் பெண் குழந்தையை கொன்றுவிட முடிவு செய்தார். பாலுக்காக குழந்தை அழுத நிலையில் பாலில் பூச்சி மருந்து கலந்து கொடுத்தார் யாஸ்மின். தூக்கத்திலேயே குழந்தை இறந்துவிட்டது.
பிரேத பரிசோதனையில் குழந்தைக்கு விஷம் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் போலீஸூக்கும் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விசாரித்த போது விஷம் கொடுத்ததை யாஸ்மின் ஒப்புக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து யாஸ்மின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
newstm.in